துரை

துரையில் செய்தியாளர் இருவருக்கு கொரோனா தொற்று ஏறட்டதால் ஆட்சியர் அலுவலக வளாக செய்தியாளர் அறை மூடப்பட்டுள்ளது.

மதுரையில் கொரோனா தாக்குதல் அதிகரிப்பு காரணமாக ஜூன் 30 வரை மீண்டும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.  இதனால் மதுரை நகரம் வெறிச்சோடி போய் உள்ளது.  மக்கள் அதிகம் நடமாடும் மாசி வீதிகள், நகைக்கடை பஜார், திண்டுக்கல் சாலை, டவுன்ஹால் சாலை போன்ற பல இடங்களில் மக்கள் நடமாட்டம் முழுவதுமாக இல்லாத நிலை ஏற்பட்டது.

மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.   இதனால் மதுரைக்கு வரும் பேருந்துகள், திருமங்கலம், மேலூர், கடவூர், வாடிப்பட்டி, செக்கானூரணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன.  சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை நகரில் உள்ள செய்தியாளர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதையொட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தியாளர் அறை மூடப்பட்டுள்ளது.  அத்துடன் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஆட்சியர் உத்தரவின் பேரில் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.