தவி உயர்வு சந்தோஷத்தை தர வேண்டும்.

ஆனால் இரு நீதிபதிகள், தங்களுக்கு கிடைத்த பதவி உயர்வால், பரிதவிக்க நேர்ந்த சம்பவம் இது:
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த தீபாங்கர் தத்தாவை பம்பாய் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் இரு தினங்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்தார்.

ஊரடங்கு காரணமாக ரயில், விமானம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் உடனடியாக எப்படி பதவி ஏற்பது?
,தன்னால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், காரிலேயே கொல்கத்தாவில் இருந்து மும்பை சென்றார், தத்தா.

பயணதூரம் 2 ஆயிரம் கி.மீ.
இதே நிலைதான், பிஸ்வாந்த் சோமாதருக்கும்.
அலாகாபாத் நீதிபதியாக இருந்த அவர், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

பிஸ்வாந்தும் உடனடியாக பதவி பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல்.

அலாகாபாத்தில் இருந்து மேகாலயா தலைநகர் ஷில்லாங் நகருக்கு, அவரும் காரில் பயணம் செய்ய நேர்ந்தது.

விநோதம் என்னவெனில், இவரும் 2 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டி இருந்தது.