பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 2 பேர் பலி
காசா நகர்:
பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கிகரித்து அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
காசா நகரில் அமெரிக்காவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்தன. அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது நடந்த வான் வழி தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.