சென்னை,

மிழகத்தில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்களுக்கு ஸ்மார்ட் கார்டு பெரும்பாலான பகுதிகளில் வழங்கப்பட்டது.

நேற்று (செப்-1) முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கலாம் என தமிழக அரசும் அறிவித்தது.

ஆனால், பெரும்பாலான ஸ்மார்ட் கார்டுகளில் பல்வேறு பிழைகள் இருப்பதாக ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அட்ரஸ் மட்டும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் பதியப்பட்டுள்ளன என்றும், தற்போதைய விவரங்கள் ஏதும் இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுஉள்ளது.

தமிழக அரசு  அவசர கதியில் வழங்கிய ஸ்மார்ட் கார்டால் பல இடங்களில் குழப்பம் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஸ்மார்ட் கார்டில் பிழை இருப்பதாக அமைச்சர் காமராஜே ஒப்புக்கொண்டுள்ளனார். சுமார்  2 லட்சம் கார்டுகளில் பிழைகள் இருப்பதாக, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தி ருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இதுவரையில், 70 சதவிகிதம் பேருக்கு, ஒரு கோடியே 40 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளதாக கூறிய அமைச்சர் காமராஜ், மேலும், 20 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இதுபோல பிழையான முகவரிகளுடன்  ஸ்மார்ட் கார்டுகள் அச்சடித்து வழங்கி என்ன பயன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.