அழியும் நிலையில் இரு தமிழக மொழிகள்

டில்லி:

மிழகத்தில் பேசப்படும் இரு மொழிகள் அழியும் நிலையில் உள்ளதாக மொழியியில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பேசப்படும்  கோட்டா மற்றும் தோடா போன்ற தென் திராவிட மொழிகள் உட்பட, 42 மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும்பட்டியலில்  இருக்கின்றன.
குறைந்த அளவு மக்கள் பயன்படுத்துவதால், 42 இந்திய மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் அழிந்துவிடும் என்று மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும், “மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தக் கூடிய, 22 பட்டியலிடப்பட்ட மொழிகள், 100 பட்டியலிடப்படாத மொழிகள் புழக்கத்தில் இருக்கின்றன.

அதே நேரத்தில், 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பயன்படுத்துவதால், 42 மொழிகள், வட்டார பேச்சு வழக்குகள் மிக விரைவில் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கின்றன.

இதை யுனெஸ்கோவும் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில், கோட்டா மற்றும் தோடா ஆகிய மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.