ஆந்திராவில் எம்எல்ஏ கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுண்டர்

அமராவதி:

ந்திராவில் எம்எல்ஏ கொலை செய்யப்பட்ட வழக்கு காரணமாக, அவரை கொலை செய்த மாவோயிஸ்டுகள் குறித்து தேடப்பட்டு வந்த நிலையில், 2 மாவோயிஸ்டுகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். மேலும் 3 பெண்கள் உள்பட 4 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். அதுபோல முன்னாள்  சிவசேரி சோமாவும் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்தவர்தான்.

சம்பவத்தன்று  காலை இவர்கள் காரில் ஒன்றாக சென்ற போது  மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,  மாவோயிஸ்டுகளை தேடி வந்தனர். இந்த நிலையில் 2 மவோயிஸ்டுகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும்,  3 பெண் கள் உட்பட 4 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.