ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை: 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பேம்பூர் நகரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது நண்பகல் 12 மணியளவில் ஒரு தீவிரவாதியை சுட்டு கொன்றனர்.

ஆனாலும், தீவிரவாதிகளுடனான தாக்குதல் தொடர்ந்தது. அதன் எதிரொலியாக மேலும் ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார். மொத்தம் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  தேடுதல் வேட்டை தொடர்வதாக பாதுகாப்பு படையினர் கூறி உள்ளனர்.