டில்லி

ன்று மக்களவையில் டில்லி போராட்டத்தின் போது மரணமடைந்த விவசாயிகளுக்கு ராகுல் காந்தி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.   அப்போது அவர் மத்திய அரசு குறிப்பிட்ட 4 பேருக்காக வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக கூறினார்.  மேலும் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இருக்காது எனவும் மண்டி முதலாளிகள் மட்டுமே பயன் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையொட்டி மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினார்கள்.  அப்போது ராகுல் காந்தி விவசாயிகள் போராட்டத்தின் போது மரணம் அடைந்த விவசாயிகளுக்காக 2 நிமிடம் மவுனம் அனுசரிக்க வேண்டினார்.  ஆனால் அதற்கும் பாஜக உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர்.  மேலும் இந்த கோரிக்கைக்கு ஒப்புக் கொண்ட காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களை நோக்கி கடுமையாகக் குரல் எழுப்பினர்.

ஆயினும் காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் ராகுல் காந்தி தலைமையில் டில்லியில் போராட்டத்தில் உயிர் இழந்த விவசாயிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி உள்ளனர்.