சபரிமலைக்கு வர முயன்ற மேலும் 2 பெண்கள்! கேரளாவில் மீண்டும் பரபரப்பு

பம்பை:

ச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து  சபரிமலைக்கு பெண்கள் வர முயற்சி செய்து வரும் நிலையில், பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று சபரி மலை வர முயன்ற  மேலும் 2 பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்ட னர். இதன் காரணமாக  கேரளாவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து பல பெண்கள் கோவிலுக்கு வர முயற்சி செய்வதும், அவர்களை பக்தர்கள் திருப்பி அனுப்பி வைப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

இதற்கிடையில் சில பெண்கள் மாறுவேடம் அணிந்தும், சிலர் அரசின் பாதுகாப்புடனும் கோவிலுக்குள் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதுவரை  51 இளம்பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக மாநில அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று காலை மேலும் இரு பெண்கள் சபரிமலை செல்வதற்காக நிலக்கல் அடிவார முகாம் வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் கோவில் நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது பக்தர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால்,  அவர்களை போலீசார்  தடுத்து நிறுத்தினர்.

பம்பையில் அய்யப்ப  பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளதால் திரும்பி  செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.  இதனையடுத்து இரண்டு பெண்களும் திரும்பிச் சென்றனர். இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Sabarimala Women, SabarimalaProtest, supreme court, அய்யப்பன் கோவில், உச்சநீதி மன்றம், ஐயப்ப பக்தர்கள், கேரள அரசு, சபரிமலை, பெண் பக்தர்கள் |
-=-