Random image

கொழும்பு குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்ட சகோதரர்கள்!

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் வரிசையில், 2 நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை, முஸ்லீம் சகோதரர்கள் இருவர் நடத்தியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு நகரின் நறுமணப் பொருள் வியாபாரியின் மகன்களான அந்த சகோதரர்கள், ஷாங்ரி லா மற்றும் சின்னாமான் கிராண்ட் ஹோட்டகளில், காலை உணவைப் பெறுவதற்காக விருந்தினர்களைப் போன்று வரிசையில் நின்றிருந்தபோது, தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகைள வெடிக்கச் செய்தனர்.

மேலும், நான்காவது ஹோட்டலும் அவர்களின் தாக்குதல் திட்டத்தில் இருந்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அந்த முஸ்லீம் சகோதரர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் தங்களுடைய 20 வயதுகளின் இறுதியில் இருப்பவர்கள் என்று கூறப்படுகிறது.

இதர தற்கொலைப் படை நபர்களுக்கும், இந்த 2 சகோதரர்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விரிவான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

– மதுரை மாயாண்டி