டெல்லி: மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் 2 புதிய வகை கொரோனா மாதிரிகள் கண்டறியப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் அறிவித்து உள்ளது.

மற்றும் இதர மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்புக்கும், மாறுபட்ட கொரோனா மாதிரிகள்  N440K மற்றும் E484Qக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று ஐசிஎம்ஆர் விளக்கம் உள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில் 2 வகை கொரோனா வைரஸ் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, செய்தி குறிப்பு ஒன்றை ஐசிஎம்ஆர் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மகாராஷ்டிராவில் N440K மற்றும் E484Q என 2 வகைகள் இருப்பது பற்றி பேசப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தெலுங்கானாவில் இந்த வகைகள் உள்ளன. ஆனால் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களின் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்க இந்த வகை கொரோனாதான் காரணம் என்பதற்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை.

இந்த 2 கொரோனா வகைகளும் வேறு சில நாடுகளில் இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. கடந்தாண்டு மார்ச், ஜூலை மாதங்களில் மகாராஷ்டிராவில் E484Q என்ற மாதிரிகள் 4 இடங்களில் கண்டறியப்பட்டு உள்ளன.

அசாம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் N440K கொரோனா வகையானது, கடந்தாண்டு மே மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட தருணத்தில் கண்டறியப்பட்டு உள்ளது. எப்படி இருந்தாலும் அனைத்துமே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.