ராஜஸ்தான் சாலையில் கிடைத்த வாக்குப்பதிவு இயந்திரம் : இரு அதிகாரிகள் சஸ்பெண்ட்

 

ஷாகாபாத், ராஜஸ்தான்

வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று சாலையில் கிடந்ததை ஒட்டி  ராஜஸ்தான் மாநிலத்தில் இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.   மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.    இந்த வாக்குப்பதிவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன் படுத்தப் பட்டன.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரன் மாவட்டத்தில்  அமைந்துள்ளது கிஷான் கஞ்ச் என்னும் தொகுதி,   இந்த தொகுதிக்குட்பட்டது ஷாகாபாத் பகுதி ஆகும்.    இந்த பகுதியில் நேற்று தேர்தலில் பயன்படுத்தபட்ட  ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் சாலையில் கிடைத்துள்ளது.

நேற்றைய வாக்கெடுப்பில் பயன்படுத்தப் பட்ட இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறன.   இந்நிலையில் இவ்வாறு தேர்தலில் ஒரு பயன்படுத்தப்பட்ட  வாக்குப்பதிவு இயந்திரம் சாலையில் கிடைத்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது

இந்த சம்பவத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் அப்துல் ரபீக் மற்றும் பத்வாரி நவல் சிங் ஆவார்கள்.   அவர்கள் இருவரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   மாவட்ட தேர்தல் அலுவலர் சிபாரிசின் பேரில் இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.