மத்திய பிரதேசத்தில் 3 தேர்தல் அதிகாரிகள் திடீர் மரணம்: தேர்தல் கமிஷனம் நிவாரணம் அறிவிப்பு

போபால்:

ன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த 3 தேர்தல் அதிகாரிகள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளது.

230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டப்பேரைவைக்கு  இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும்  65,341 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 17,000 வாக்கு மையங்கள் பதற்றமானவை என அறியப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணைக்கும் பணி உள்பட வாக்குப் பதிவுக்கு தேவையான நடவடிக்கைகளில்  தேர்தல் பணியாளர்கள் நேற்று முதலே ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 3 பேர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் 2 பேரும், குனா பகுதியில் உள்ள  வாக்கு மையத்தில் ஒருவரும் என 3 பேர் தொடர்ச்சியாக ஒரே நாளில் இறந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இறந்த தேர்தல் அதிகாரிகள் 3 பேரும் மாரடைப்பு காரணமாகவே உயரிழந்துள்ளதும் தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை ரெட்கிராஸ் அமைப்பு செய்யும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.