சென்னை ஐஐடி ஏரியில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கினர்

--

சென்னை:

சென்னை அடையாறு ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் கானகம் பகுதியை சேர்ந்த 7 பேர் இன்று மாலை குளித்தனர். அப்போது மூர்த்தி, ஜெரால்டு ஆகிய 2 பேர் நீரில் மூழ்கினர்.

அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஐஐடி வளாத்தினுள் செல்ல வெளி நபர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் இவர்கள் பின்பக்க சுவர் வழியாக உள்ள நுழைந்து ஏரியில் குளித்தது தெரியவந்துள்ளது.