ஈரானில் நிலநடுக்கம்….2 பேர் பலி

டெஹ்ரான்:

ஈரான் மேற்கு பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் பலியாயினர்.

ஈரான் மேற்கு பகுதியான கெர்மான்ஷாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது. இச்சம்பவத்தில் 2 பேர் பலியாயினர்.

300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மீட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.