பெல்ஜியம்: 2 போலீஸ்காரர்கள் சுட்டுக் கொலை

புருசெல்ஸ்:

பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ் நகர் அருகே லீய்ஜ் பிரெஞ்ச் மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழுகின்றனர்.

இங்கு பள்ளி அருகே இன்று காலை துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் 2 போலீஸ்காரர்களை நோக்கி சுட்டான்.
இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களுடன் வந்த போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் மர்ம நபரும் கொல்லப்பட்டான். அவன் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.