சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உள்பட 3 பேர் பலி

தண்தேவாடா:
த்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் தூர்தர்ஷன் சேனலின் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 காவலர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில்  மாவோயிஸ்டுகள் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதை ஒடுக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்தால், காவல்துறையினர் மீது மாவோயிஸ்டு களின் தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது.

மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு பலியான ஒளிப்பதிவாளர் – போலீஸ் அதிகாரி

ஏற்கனவே கடந்த 12ந்தேதி மற்றும் 20ந்தேதி காவல்துறையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்கள் நடத்தி ய நிலையில், இன்று நடத்திய திடீர் அதிரடி தாக்குதலுக்கு 2 காவல்துறையினர் உள்பட  அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

தேர்தல் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக தூர்தர்ஷன் குழுவினர் தண்தேவாடா மாவட்டத்தில் உள்ள ஆரன்பூருக்கு காட்டுப்பகுதி வழியாக சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக போலீசாரும் சென்றனர்.

அப்போது திடீரென்று மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில், தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் பாதுகாப்புக்காக வந்த ஆரன்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ருத்திர பிரதாப், கான்ஸ்டபிள் மங்கலு ஆகியோரும்  உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின்போது, துணை ஒளிப்பதிவாளர் தப்பிஓடி பிழைத்துக் கொண்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் விரைந்துள்ளர். மாவோயிஸ்டுகளை தேடி வருகின்றனர். மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திய இடத்தில் வெடிக்காத கையெறி குண்டும், அவர்கள் அரசுக்கு விடுத்த எச்சரிக்கை துண்டு பிரசுரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தண்தேவாடா எஸ்பி. அபிஷேக் பல்லவ், மாவோயிஸ்டுகள் காமிரா மேன் மற்றும் 2 காவல்துறையினரை இழுத்துச்சென்று சுட்டுக்கொன்றுள்ளனர் என்று நா  தழுதழுக்க கூறினார். மேலும் 2 ஊடகத்துறையினர் மீட்கப்பட்டுள்ளனர் தாக்குதலில் காயம் அடைந்த காவலர்கள் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது  என்றும் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2 police personnel & a DD cameraman lost their lives in an attack by Naxals in Dantewad Chhattisgarh, சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உள்பட 3 பேர் பலி
-=-