மே 16-ல் வெளியாகிறது பிளஸ்2 தேர்வு முடிவு

சென்னை:

மிழகம், புதுச்சேரியில்  நடைபெற்று வந்த பிளஸ்2 பொதுத் தேர்வுகள் ஏப்.6 ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், மே 16ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்2  பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதியுள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகள் ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 6ந்தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், ஏப். 11ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட இருப்பதாகவும், அதற்காக தமிழகத்தில் 44 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 16-ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.