சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், திருப்பூர் கல்வி மாவட்டம், தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 1281 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், அரசு பள்ளிகளில் 84.76% பள்ளிகளில் 100% தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளது.

கணிதத்தில் 96.25% பேர் தேர்வு பெற்றிருப்பதாகவும், கணினி அறிவியல் பாடத்தில் 95.27% பேர் தேர்ச்சி பெற்றதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

கடந்த சில வருடங்களாக கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்து வந்த நிலையில், இந்த வருடம் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை தட்டிச்சென்றுள்ளது. அங்கு,  95.37  சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.  மொத்தம் 8,87,772 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவு என்று காலை 9.30 மணிக்கு வெளியானது.

தேர்வுமுடிவுகள் அரசு அறிவித்துள்ள    www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங் களில் வெளியாகி உள்ளது. மாணவ மாணவவிகள் இணையதளத்துக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மாநிலத்தில் மொத்தமாக 93.64 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.64 சதவிகிதம் மாணவிகளும், 88.57 சதவிகிதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கணிதத்தில் 96.25% பேர் தேர்வு

கணினி அறிவியல் பாடத்தில் 95.27% பேர் தேர்ச்சி

1281 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளது

அரசு பள்ளிகளில் 84.76% பள்ளிகளில் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது.

அதன்படி 238 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.66% பள்ளிகளில் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டம் 95.37  சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

ஈரோடு கல்வி மாவட்டம் 95.23 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தையும், 

பெரம்பலூர் 95.15 சதவிகிதத்துடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.