கோவா: வீட்டின் பின்புறத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 ரஷ்யர்கள் கைது

பனாஜி:

க்ஷகோவாவில் ரஷ்ய நாட்டினர் வாடகை கார்கள் இயக்கியும், கடைகள் நடத்தியும் தொழில் செய்து வருகின்றனர்.  இவர்கள் கோவா அன்ஜுனா கடற்கரைக்கு அருகே சியோலிம் கிராமத்தில் வீடு வாடகைக்கு பிடித்து தங்கியுள்ளனர்.

வீட்டின் பின்புறத்தில் இவர்கள் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்ததை கோவா குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக மேக்சிம் மோஸ்கிச்சேவ், ஆர்ட்டெம் செரேகின் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்து கஞ்சா செடிகளையும் அழித்தனர்.

இருவரிடம் இருந்து ரூ.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.