ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 பேர் காயம்

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரில் அமைந்துள்ள  சிஆர்பிஎப் வீரர்கள்  முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து எதிர்தாக்குதல் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது எல்லை பாதுகாப்பு வீரர்கள் மற்றும் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவர்களை இந்திய வீரர்கள் சுட்டுத்தள்ளி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தின் ககபுரா பகுதியில் உள்ள  சிஆர்பிஎப் காவலர்கள் முகாம் மீது நேற்று நள்ளிரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்.

இந்த திடீர் தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  அவர்களை மருத்துவமனையில் சேர்த்த வீரர்கள், பயங்கரவாதிகடிள தேடி வருகின்றனர்.

You may have missed