ஜம்மு:

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

‘‘காஷ்மீர் ஆனந்த்நாக் மற்றும் சோபியானில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சோபியான் பகுதியில் நடந்த சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்’’ என்று காஷ்மீர் டிஜிபி வைத் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஆனந்த் நாக் மாட்டத்தில் நடந்த என்கவுன்டரில் ஒரு தீவரவாதி கைது செய்யப்பட்டான். ஒருவன் கொல்லப்பட்டான். சிஆர்பிஎப் மற்றும் ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு இடங்களில் என்கவுன்டர் முடிவடைந்தது. ஒரு இடத்தில் தொடர்கிறது. வன்முறையை பாதையை கைவிட தீவிரவாதிகளின் குடும்பத்தினருடன் ஆனந்த்நாக் எஸ்எஸ்பி கேட்டுக்கொண்டார்.

ஆனால், தீவிரவாதிகள் அதனை கேட்கவில்லை. சோபியான் பகுதியில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல் அடையாளம் காணப்பட்டது. அவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள். உறவினர்கள் அவர்களின் உடலை கேட்டுள்ளனர். சோபியானில் நடந்த என்கவுன்டரில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். என்கவுன்டரில், சோபியானின் டிராகத் மற்றும் கத்தூரா பகுதியில் தலா ஒரு பொது மக்கள் உயிரிழந்தனர். 25 பொது மக்களுக்கு பெல்லட் குண்டுகளாலும், 6 பேருக்கு துப்பாக்கி குண்டுகளாலும் காயம் ஏற்பட்டது’’ என்றார்.

மேலும், ராணுவ அதிகாரி கூறுகையில், ‘‘என்கவுன்டரில் கொல்லப்பட்ட 8 தீவிரவாதிகளில் 2 பேர், இந்திய ராணுவ வீரர் லெப்டினன்ட் உமர் பையாஸ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். ராணுவம், துணை ராணுவம், காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிரவாதிகளை எதிர்கொண்டனர்’’ என்றார்.