Random image

டில்லி செங்கோட்டை அருகே 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது: தலைநகரில் பரபரப்பு

டில்லி:

நாட்டின் தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தலைநகர் டில்லியில்  உள்ள செங்கோட்டை அருகே மப்டியில் இருந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் 2 இளைஞர்களை கைது செய்தனர். அவர்களை விசாரித்ததில் அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

வழக்கம் போல காவல்துறையினர் செங்கோடை பகுதியில் மப்டி உடையில் ரகசிய கண்காணிப்பு பணிகளை செய்து வந்தனர். அப்போது, அங்குசுள்ள  பேருந்து நிறுத்தம் ஒன்றில் சந்தேகத்துக்கிடமான நிலையில் நின்றிருந்த இருவரை பிடித்து பயங்கரவாத சிறப்புப் பிரிவு போலீசார்  சோதனையிட்டனர்.

அவர்களிடம் இருந்து  வெளிநாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இருவரும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொறியியல் மாணவர்களான அவர்களது பெயர் பர்வேஸ் மற்றும் ஜம்ஷெத். இவர்கள் இருவரும் ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. . இதனதை்தொடர்ந்து அவர்களிடம் க்யூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.