தேசிய நல்லாசிரியர் விருது – தமிழகத்திலிருந்து 2 பேர் மட்டுமே தேர்வு!

புதுடில்லி: இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானோர் பட்டியலில், 2 தமிழர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 47 பேர் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலீப் மற்றும் சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சரஸ்வதி ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் நினைவாக, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஏனெனில், அவர் ஆசிரியராக பணியாற்றியவர். நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவர்கள் அனைவருக்கும் டில்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் விருது வழங்கப்படவுள்ளது.