3வது நாளாக 2ஆயிரத்தை கடந்தது: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 54,449 ஆக உயர்வு…

சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 3வது நாளாக 2ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில்  இன்று ஒரே நாளில் புதிதாக 2115 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1322 பேர் பாதிக்கப்பட்டனர்.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்த நிலையில், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  38327 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 1630 பேர்  குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை  30,271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று ஒரே நாளில் மேலும் 41 பேர் உயிரிழந்தையடுத்து, தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்திலேயே  அதிகப்பட்சமாக சென்னையில்  அதிக அளவிலான கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.  1,65,609 மாதிரிகள் சென்னையில் சோதனை செய்யப்பட்டன.

பெரம்பலூரில் செய்யப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான சோதனைகள்- 4351 சோதனைகள் நடைபெற்றுள்ளன.
ஒரு மில்லியனுக்கு தமிழ்நாட்டின் சோதனைகள் 8666 ஆகவும், தேசிய சராசரி 4657 ஆகவும் உள்ளது.