Random image

7ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 2ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி: செங்கோட்டையன்

ஈரோடு:

ரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரம்பும் வகையில்  ரூ.7,000 சம்பளத்தில் 2000 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணி அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து முதல்வர் சமீபத்தில் ஒரு கோப்பில் கையெழுத் திட்டுள்ளார். அதன்படி, எந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்பதை கண்ட றிந்து,  அந்த இடங்களில், 7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படு வார்கள்.  பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இந்த நியமனம் நடைபெறும் என்றும எதிர்காலத்தில் பள்ளிகளில் காலிப் பணியிடம் என்பதே இருக்காது என்றார்.

மேலும், ஆசிரியைகளின்  மகப்பேறுக்கு 9 மாத விடுமுறையின்போது, அவர்களுக்கு பதிலாக தற்காலிகமாக இந்த ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆண்டுதோறும்  பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்ற  நிதிகள் தலா 30,000, 50,000 என அந்தப் பள்ளிகளின் நிலைமைக்கு ஏற்ப உயர்த்தி வருவதாகவும், அதைக்கொண்டு  துப்புரவு பணியாளர்களை தற்காலிகமாக நியமித்துக்கொள்ள அந்தந்த பள்ளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகவும்,  எதிர்காலத்தில் பள்ளி கழிப்பிடங்கள் சுத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் மாணவர்களின் கழிப்பிடம் சுகாதாரமாக இருக்க இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.

தமிழகத்தில் 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன அதில் 82 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். எனவே பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்துவிட முடியாது படிப்படியாகத்தான் செய்ய முடியும் என்ற அமைச்சர்,  பள்ளிகளை சுத்தம் செய்வதற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  வரும் பொங்கலுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மை செய்யும் வகையில் வெள்ளையடித்து தரப்படும் என்றும் கூறினார்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய ஆயிரத்து 1500 கோடி ரூபா யில் மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ள 102 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளதாக கூறிய அமைச்சர், மீதியுள்ள தொகை பெறுவதற்காக நான் மத்திய மந்திரியை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.