மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு

போபால்:

த்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,577 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதையும் கொரோனா தன் கோரப்பிடியில் சிக்க வைத்துள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. பிரதமர் மோடியும் கொரோனா மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தக்கோரி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசியுள்ளார்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் சுகாதார பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் நேற்று மட்டும் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 179 ஆக உயர்ந்தது.

ஏற்கனவே, கடந்த வியாழக்கிழமை சுகாதாரத்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, போபாலில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வசித்து வரும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி