Random image

ஓரினச்சேர்க்கை விவகாரம்: மலேசியாவில் 2 பெண்களுக்கு சவுக்கடி

கோலாலம்பூர்:

ரினச்சேர்க்கை எனப்படும் ஹோமோ செக்சில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 2 பெண்களுக்கு மலேசிய நீதிமன்றம் சவுக்கடி வழங்குமாறு தீர்ப்பளித்தது. அதன்படி அவர்களுக்கு சவுக்கடி தண்டனை நிறை வேற்றப்பட்டது.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடான மலேசியவில் முஸ்லிம் சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.  மலேசியாவின் வடகிழக்கு பகுதியான டிரெங்கானுவில் (Terengganu) சுமார 32 வயது மற்றும் 22 வயது மதிக்கத்தக்க பெண்கள் இருவர் லெஸ்பியனில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்கள்மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு  ‌ஷரியா ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை குற்றவாளி என அறிவித்து,   அப்பெண்கள் 2 பேருக்கும் தலா 6 தடவை பிரம்படி தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதை தொடர்ந்து கோர்ட்டில் வைத்தே அவர்களுக்கு பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பெண்களுக்கு சவுக்கடி தண்டனை நிறைவேற்றும்போது கோர்ட்டு வளாகத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

ஓரினச்சேர்க்கைக்காக தண்டனை வழங்கியதற்காக மனித உரிமை ஆர்வலர்கள்  மலேசிய அரசுக்கு கண்ட னம் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில், தண்டனை சரியே என்று ‘டிரெங்கானு மாநில ‘ கவுன்சில் உறுப்பினர் சாதிபுல் பக்ரி மமத் கூறி உள்ளார்.இனிமேல் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறக்கூடாது என பொதுமக்களுக்கு உணர்த்தவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது’’ என்றும் கூறி உள்ளார்.

ஓரின சேர்க்கை குற்றத்துக்காக மலேசியாவில் பெண்களுக்கு பிரம்படி தண்டனை நிறை வேற்றப்பட்டது. இதுவே முதன்றையாகும்.

இதுபோன்ற வழக்கில் இந்தியாவில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

You may have missed