கோவில் பிரசாதம் சாப்பிட்ட 30 பேர் உடல்நலக் குறைவு : இரு பெண்கள் மரணம்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 20 பேர் உடல் நலம் கெட்டு அதில் இரு பெண்கள் மரணம் அடைந்துள்ளனர்.

கோவையில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மேட்டுப்பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவில்.    இங்கு வந்த வந்த பக்தர்கள் 30 பேருக்கு பிரசாதம் வழங்கப் பட்டுள்ளது.  அதை சாப்பிட்ட அவர்கள் அனைவரும் வயிற்று வலியுடன் மயங்கி விழுந்தனர்.

உடனடியாக அவர்கள் 30 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.    அதில் இரு பெண்கள் மரணம் அடைந்துள்ளனர்.  அவர்கள் அதே ஊரை சேர்ந்த லோகநாயகி மற்றும் சாவித்திரி என்பவர்கள் ஆவார்கள்.   மற்றவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை.   பிரசாதம் செய்யும் போது காலாவதி ஆகி கெட்டுப்போன நெய் மற்றும் எண்ணெய் ஆகியவைகள் உபயோகப் படுத்தியதாக கூறப்படுகிறது.    அதனால் உணவு விஷமாகி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.