பெங்களூரு மாணவருக்கு கூகுள் நிறுவனத்தில் பணி….ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம்
பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப மையத்தின் முன்னாள் மாணவரான ஆதித்யா பாலிவால் (வயது 22) என்பவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இவருக்கு ஆண்டு சம்பளம் 1.2 கோடி ரூபாய் என்ற தொகுப்பில் இந்த வேலை கிடைத்துள்ளது.
எம்.டெக் படிததுள்ள மும்பையை சேர்ந்த ஆதித்யா நியூயார்க் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த பிரிவில் பணிபுரியவுள்ளார். வரும் 16ம் தேதி இவர் பணியில் இணைய உள்ளார்.
செயற்கை தொழில்நுட்பம் குறித்து கூகுள் நிறுவனம் நடத்திய தேர்வில் 6 ஆயிரம் கலந்துகொண்டனர். இதில் 50 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் ஆதித்யா பாலிவாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.