20ஆயிரம் போலி ரேசன் கார்டு

கோவை மாவட்டத்தில் 1,398 ரேஷன் கடைகள் உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுககு அரிசி, பருப்பு, உளுந்து, சர்க்கரை, சமையல் எண்ணெய், கோதுமை உள்பட பல்வேறு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

ration-card-0031

தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டதால், மீண்டும் புதிய விண்ணப்பங்கள், பெயர் திருத்தம், நீக்கம் ஆகியவற்றுக்கும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெவிவித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் புதிய ரேசன்கார்டுகள் வழங்கப்படும். புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் கார்டுதாரர்களின் முகவரி, ஆதார் எண் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று இருக்கும்.