20/05/2020: சென்னையில் கொரோனா தொற்று… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று  இன்றைய (20ந்தேதி) நிலவரம் குறித்து  மண்டலம் வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 668 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 552 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து  சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,672 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5640. இதுவரை நோய்த் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1931. பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு.

சென்னையில் உள்ள 15 மண்டல வாரியாக பார்கையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 1,137, திரு.வி.க நகரில் 900, தேனாம்பேட்டையில் 822, தண்டையார்பேட்டையில் 723 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.