சென்னை: தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக  சென்னை யில் மட்டும் இதுவரை 1,21,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,01,913 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று  1175 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,811 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 19 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை  பக்கத்து மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள்  மொத்த எண்ணிக்கை 6,32,780.

 இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 116 பேர் உயிரிழந்தனர். இதில் 44 பேர் தனியார் மருத்துவமனையிலும், 72 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதில் சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 6,239ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2537 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 108 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை  ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 450 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 10,558 பேருக்கும், திண்டுக்கல்லில் 5,303 பேருக்கும் திருநெல்வேலியில் 8,048 பேருக்கும், ஈரோட்டில் 1,804, திருச்சியில் 6,335 பேருக்கும், நாமக்கல் 1,411 மற்றும் ராணிப்பேட்டை 8,914, செங்கல்பட்டு 22,286, மதுரை 13,149, கரூர் 1,167, தேனி 11,009 மற்றும் திருவள்ளூரில் 21,402 பேருக்கு, தூத்துக்குடியில் 10,293, விழுப்புரத்தில் 5,648 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 1,710 பேருக்கும், திருவண்ணாமலையில் 9,129, தருமபுரியில் 1,070 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.