20/08/2020: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,25,59,106ஆக உயர்வு…

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் கடந்த 8 மாதங்களாக மிரட்டி வருகிறது.  இன்று நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2,25,59,106 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும்,  7லட்சத்து 90ஆயிரத்து 10 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும்  கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை இதுவரை 2,22,94,372  ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1கோடியே 52லட்சத்து 92ஆயிரத்து 035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை  7லட்சத்து 90ஆயிரத்து 10 ஆக அதிகரித்து உள்ளது.

உலக நாடுகளில்  கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதே வேளையில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,699,888 ஆகவும்,  இதுவரை  1,76,328 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதுவரை 3,062,664 பேர் குணமடைந்து உள்ளனர்.

2வது இடத்தில் பிரேசில் உள்ளது.  அங்கு இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் 3,460,413 ஆக உள்ளது. இதுவரை 111,189 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலயில், இதுவரை 2,615,254 பேர் குணமடைந்து உள்ளனர்.

3வது இடத்தில் இந்தியா உள்ளது.  இந்தியாவில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,835,822 ஆக  உள்ளது.  இதுவரை 53,994 பேர் உயிரிழந்த நிலையில்,2,096,08 பேர் குணமடைந்து உள்ளனர்.