20/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 5795 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,20,267-ஆக அதிகரித்துள்ளது.  ஒரே  1039 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,05,494 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

தற்போதைய 12,256 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 16 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,517 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 12,525 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.