20 : 20 கிரிகெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

--

நாக்பூர்,

ந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 20ஓவர் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது இதில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி, ராகுல் ஆகியோர்  ரன்களை குவித்தனர். கோலி 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ரெய்னா, யுவராஜ்சிங் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க ரன்களுடன் ஆட்டமிழக்க,  ராகுல் அதிரடியாக விளையாடினார்.  2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 71 ரன்களைக் குவித்தார்.

மணிஷ் பாண்டே 30 ரன்கள் எடுத்தபோதும், தோனி, பாண்டியா உள்ளிட்டோர் ரன் எடுக்கத் தவறியதால், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோரூட், ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் தலா 38 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்களுடன் ஆட்டமிழந்தனர்..

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பும்ராவின் அபாரமான பந்துவீச்சு இந்தியாவின் வெற்றிக்கு கைகொடத்தது.  2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்ததுடன், ரூட், பட்லர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட 20ஓவர் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன.

கடைசிப் போட்டி வருகிற பிப்ரவரி 1ந்தே தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.

You may have missed