‘சசி’ ஆதரவால் நியமனம் செய்யப்பட்ட 20 ஏபிஆர்ஓ-க்கள் அதிரடி மாற்றம்

சென்னை:

மிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரது சசிகலா ஆதரவினால் ஏபிஆர்ஓ-க்களாக நியமனம் செய்யப்பட்ட சுமார் 20 பேர் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உயரிய பொறுப்பு, செய்தி – மக்கள் தொடர்புத்துறைக்கு உள்ளது. இத்துறையில்   மக்கள் தொடர்பு அதிகாரிகளும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பணிகளுக்கான நியமனம், அரசியல் சிபாரிசு அடிப்படையில் நேரடியாக நியமிப்பக்கப்பட்டு வருகிறது. இது பல சமயங்களில் பிரச்சினைக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது.

இநத் நிலையில், ஏற்கனவே கடந்த ஜூலை மாதம்  தமிழகம் முழுவதும் 22 ஏபிஆர்ஓ.,க்கள் ” அதிரடியாக’ மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், தலைமை செயலகம் உட்பட பல்வேறு இடங்களில் சசிகலா குடும்பத்தினர் ஆதரவால் நியமனம் செய்யப்பட்ட 20 ஏபிஆர்ஓக்கள் அதிரடியாக  பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed