கேரள மாநில சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் வியூகங்களை இப்போதே மேற்கொள்ள தொடங்கி விட்டது.

அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த கட்சி, இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கியது.

அவர்கள் அமோக வெற்றி பெற்று, மேயர், நகராட்சி தலைவர் போன்ற பொறுப்புகளில் அமர்ந்துள்ளனர்.

எனவே வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் இளைஞர்களுக்கு அதிக அளவில் டிக்கெட் அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது.

இரு முறையும், அதற்கு மேலும் எம்.எல்.ஏ..வாக இருந்தவர்களுக்கு இந்த முறை சீட் கொடுக்கப்பட மாட்டாது.

முதல்-அமைச்சர் போன்ற மூத்த தலைவர்களுக்கு இதில் விதி விலக்கு உண்டு.

தற்போது சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக உள்ள 20 பேருக்கு டிக்கெட் கொடுப்பதில்லை என சி..பி.எம், மேலிடம் முடிவு செய்துள்ளது.

இதில் சில அமைச்சர்களும் அடங்குவார்கள்.

– பா. பாரதி