20நாள் ‘கொரோனா லீவு’… அடங்காத புள்ளிங்கோக்கள்… வீடியோ..

லகமே கொரோனா அச்சுறுத்தலுக்கு பயந்து நடுங்கிக்கொண்டுள்ள நிலையில், நம்ம புள்ளிங்கோக்கள், கொரோனா வைரஸ் ஊரடங்கை கலாய்த்து வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையிலும், கூட்டங்கள் கூடுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள் உள்பட அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு இருப்பதுடன் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், நமது புள்ளிங்கோக்கள் இந்த 21 நாள் விடுமுறையும் கலாய்த்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

அடங்கமாட்டார்கள் போலும்…