பட்டப்பகலில் அநியாயம் : காதலன் கண் முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இருபது பேர் !

டிஜி, ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் டிஜி என்ற ஊரில் காதலனை கட்டிப்போட்டு விட்டு 20 பேர் அடங்கிய ஒரு கும்பல் ஒரு இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளது.

டிஜி பல்கலைக்கழகத்தில் பயிலும்  ஒரு பழங்குடியை சேர்ந்த மாணவி  வேறு ஒரு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார்.  சம்பவத்தன்று நண்பகலில்  அவர் காதலனுடன் மோட்டார் சைக்கிளில் உல்லாசமாக சென்றுக் கொண்டிருந்த போது சுமார் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துள்ளது.

அந்தப் பெண் பழங்குடியினர் என்றும், அவள் காதலன் வேறு வகுப்பை சேர்ந்தவர் என்பதையும் அவர்களிடமிருந்தே தெரிந்துக் கொண்ட அந்தக் கும்பல் காதலனை அடித்து உதைத்தனர்.  அவரிடமிருந்த மொபைல் ஃபோனை பிடுங்கிக் கொண்டனர்.  அவரை கத்தியைக் காட்டி மிரட்டி மரத்தில் கட்டிப் போட்டனர்.  அவர்கள் ஆறு பேரும் காதலன் முன்னாலேயே அவரைக் கதற கதற பலாத்காரம் செய்தனர்.  அவர் கெஞ்சிய போதும் விடாமல், அவர்களுடைய நண்பர்களுக்கும் ஃபோன் செய்து அவர்களும் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தனர்.   20 பேர் கொண்ட கும்பல் 3 மணி நேரத்துக்கு மேல் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளது.

அந்தப் பெண்ணை நிர்வாணமாக ஃபோட்டோ எடுத்துள்ளனர்.  தவிர பலாத்காரம் செய்யும் போது பல கோணங்களில் வீடியோவும் எடுத்துள்ளனர்.  பிறகு அருகிலிருந்த குளத்துக்கு அவளை அழைத்துச் சென்று குளிக்க சொல்லி உள்ளனர்.  தடயங்களை அழித்த பின் அனைவரும் தப்பி விட்டனர்.  அந்த 20 பேரும் சுமார் 18 லிருந்து 22 வயது உடையவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பல் சென்றபின் மாணவி தன் காதலனுடன் சென்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  போலீசார் முதலில் வழி மறித்த 6 பேரையும் கைது செய்தனர்.  மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.  மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரிடம் பெண் நீதிபதி மருத்துவமனைக்கே சென்று வாக்குமூலம் வாங்கி உள்ளார்.

போலீசார் மேற்கொண்டு விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.