எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 20 தமிழக மீனவர்கள் கைது!

நாகை,

நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்களை, எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நேற்று இரவு பருத்திரை பருத்தித்துறை பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருந்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

20 மீனவர்கள் உள்பட 2 படகுகளையும்  இலங்கை கடற்படை கைப்பற்றி, காங்கேசன் துறை முகத்துக்கு அழைத்த் சென்றுள்ளது.  கைது செய்யப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களும், காரைநகர் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.