குருகிராம் : மூன்று வயதுப் பெண் குழந்தையை பலாத்காரக் கொலை செய்த இளைஞர்

குருகிராம்

மூன்று வயதுப் பெண் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொன்ற விவகாரம் மக்களிடையே கடும் பீதியை உண்டாக்கி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வந்த ஒரு தம்பதியர் குருகிராம் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தனர். இவர்களுடைய நான்காவது குழந்தையான பெண் குழந்தை கடந்த ஞாயிறு காலை 11 மணி முதல் காணவில்லை. அதிர்ந்து போன பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் பல இடங்களில் தேடி வந்தனர். இது குறித்து புகார் அளிக்கவே காவல்துறையினரும் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர்.

அந்தப் பெண் குழந்தை காலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போய் உள்ளது. பெற்றோர் வேலை முடிந்து வந்த பிறகுதான் அந்தக் குழந்தை காணாமல் போனதை அறிந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் அந்தக் குழந்தையின் அழுகுரலை கேளாததால் யாராவது மயக்க மருந்து கொடுத்து கடத்தி இருக்கலாம் என காவல்துறையினர் கருதினர்.

அடுத்த நாள் காலை மீண்டும் தேடிய போது அங்கு ஆளரவமற்ற அறை ஒன்றில் அந்தக் குழந்தை இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ந்தனர். அங்கிருந்த தடயங்களை கொண்டு ஆராயந்ததில் குற்றவாளியான சுனில் என்பவரைக் கன்டறிந்து கைது செய்தனர்.

சுமார் 20 வயதான சுனில் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி. அவரும் அதே பகுதியில் வசிப்பவர் ஆவார். விசாரணையில் சுனில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் வெறி பிடித்த நிலையில் சுனில் அந்தக் குழந்தையின் பிறப்புறுப்பில் ஒரு நீளமான கம்பை செலுத்தி உள்ளார். அத்துடன் அந்தக் குழந்தையின் தலையை அங்கிருந்த ஒரு கல்லில் மோதி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதி வாழ் மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 20 year man raped a 3 year girl and killed her brutally at Gurugram
-=-