இழப்பீடு வாங்க 20ஆண்டுகளாக போராடும் மனைவிகள்!

--

சென்னை,

செப்டிக் டாங் கிளின் செய்யும் அதன் காரணமாக மரணமடைந்த தனது கணவருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சத்தை வாங்க 20 ஆண்டுகளாக போராடுகின்றனர் மறைந்த அந்த தொழிலாளியின் இரு மனைவிகள்.

அரசு துறையினரின் அலட்சியம் காரணமாக அவர்கள் இருவரும் கணவன் மறைந்து 20 ஆண்டு களாகியும் அதற்கான நஷ்டஈடு பெறாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை பாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஆதிலட்சுமி (வயது 47), எலிசபெத் (வயது 45). இவர்களது கணவர் சாம்சன். அரசு துறையில்  சாக்கடை அகற்றும் பணி செய்து வந்தார். அப்போது கைகளாலேயே சாக்கடைகள் அள்ளுவதும், அகற்றுவதும் நடைபெற்று வந்தது.

சம்பளம் போதாத காரணத்தால் தனியாகவும் வேலைக்கு சென்று வந்தார்.  கடந்த 1993ம் ஆண்டு, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அழைப்பை ஏற்று, சாக்டை அடைப்பை எடுக்க சென்றவர், சாக்கடை  குழிக்குள் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக மூழ்கினார். அதையடுத்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மரணத்தை எய்தினார்.

அதைத்தொடர்ந்து  அந்த வீட்டை சேர்ந்தவர்கள்  ரூ.30ஆயிரம் கொடுத்து, தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர்.

தற்போது தான்   துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருவதாக கூறிய எலிசபெத், தனது கணவரின் மறைவுக்கு அறிவிக்கப்பட்ட நஷ்ட ஈடு இதுவரை கிடைக்கவில்லை என்று கூறி உள்ளார்.

ஆனால், இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. அதில் ரூ.10 லட்சம் நஷ்டஈடை உடனே  வழங்க  2014ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை எங்களுக்கு அந்த நஷ்ட ஈடு தொகை கிடைக்கவில்லை என்று கூறினர்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளை சந்தித்தும், எந்தவித பயனும் இல்ல. ஒவ்வொரு முறை எழிலகம் வந்து, தமிழ்நாடு ஆதி திராவிடர் ஹவுசிங் டெவலப்மென்ட்  (TAHDCO) அதிகாரிகளை சந்திக்கும் போதும், மற்ற துறைகளை கைகாட்டி அலைகழித்து வருகின்றனர்.

கணவர் இறந்து 20 ஆண்டுகளுக்கு  மேலாகியும் அதற்கான நஷ்டஈடு பணமாக ரூ.10 லட்சத்தை கொடுக்க அரசும், அரசு அதிகாரிகளும் அலைக்கழித்து வருவது வேதனை அளிக்கிறது.