Random image

20வயது வித்தியாசம் காரணமாகவே ‘எஸ்கேப்’ ஆனேன்: எம்எல்ஏவை திருமணம் செய்ய மறுத்த பெண் வாக்குமூலம்

சென்னை:

தனக்கும் தன்னை திருமணம் செய்ய இருந்த எம்எல்ஏவுக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது. அதன் காரணமாகவே நான் வீட்டை விட்டு வெளியேறியதாக மாயமான மணப்பெண் சந்தியா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரோடு பவானிசாகர் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன் இவருக்கு வயது 43. இதுவரை திருமண மாகாத அவருக்கு 23 வயதான இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. வரும் 12ந்தேதி திருமணம் என்று ஊர் முழுவதும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்த நிலையில், எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த பெண் திடீரென தலைமறைவானார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மணம்பெண்ணுக்கு ஏற்கனவே வாலிபர் ஒருவருடன் காதல் இருந்தது என்றும், வயது வித்தியாசம் காரணம் என்றும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு ஏற்கனவே அறிவித்தபடி  வரும் 12ந்தேதி திருமணத்தை நடத்தி முடிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்து வேறு மணப்பெண்ணை தேர்வு செய்து, அவருடன்  திட்டமிட்டப்படி  திருமணம் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர,

இந்த நிலையில், தற்போது மாயமான மணப்பெண் சந்தியா மீட்கப்பட்டுள்ளார். சந்தியாவின் பெற்றோர் காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் சந்தியாவை தேடி வந்தனர். அப்போது, சந்தியா திருச்சி அருகே  மணப்பாறையில் உள்ள தனது கல்லூரி தோழி சத்யா என்பவரது வீட்டில் தங்கி யிருந்தது தெரியவந்தது.

அங்கு சென்ற காவல்துறையினர்,  சந்தியாவை மீட்டு கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் சந்தியா அளித்த வாக்குமூலத்தில், தனக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள மணமகனுக்கு வயது 43 ஆகிறது. என்னைவிட 20 வரும் அதிகமாக உள்ள அவருடன் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றனர். எனது தந்தை வயதுடையவர் அவர் அவரை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும். இதன் காரணமாக தான் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி,  விருப்பம் இல்லாமல் பெண்ணிற்கு திருமணம் செய்து வைப்பது தவறு என்று கடித்தார். மேலும்,  சந்தியாவை திட்டவோ அவதூறாக பேசவோ கூடாது என்றும் அவரது பெற்றோருக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.