டில்லி

ரசு அளித்த இல்லங்களை காலி செய்யாத 200 முன்னாள் மக்களவை உறுப்பினர்களை 7 நாட்களுக்கு காலி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

டில்லி லூடியன் பகுதியில் மக்களவை உறுப்பினர்களுக்கு அரசு குடியிருப்புக்களை வழங்கி உள்ளது. இந்த இல்லங்கள் மக்களவை கலைக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் காலி செய்யப்பட வேண்டும். சென்ற 16 ஆம் மக்களவையைக் குடியரசுத்  தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 25 ஆம் தேதி கலைத்து உத்தரவிட்டார்.

அதன் பிறகு மக்களவை தேர்தல் நடந்து புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இன்னும் 200 முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் தங்கள் இல்லங்களை காலி  செய்யாமல் உள்ளனர். இதனால் புதிய உறுப்பினர்கள் பலர் தங்க இடம் இல்லாமல் நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்களவை வீட்டு வசதிக் குழுவின் தலைவர் ஜி ஆர் படேல், “இது குறித்து நேற்று குழுக் கூட்டம் நடந்தது. அதஒஇ ஒட்டி இன்னும் மூன்று நாட்களில் இந்த  இல்லங்களுக்கு மின்சாரம், குடிநீர், எரிவாயு உள்ளிட்ட அனைத்து இணைப்புக்களும் துண்டிக்கப்படும். அத்துடன் முன்னாள் உறுப்பினர்கள் 7 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.