டில்லி:

அமெரிக்காவின் 4வது பெரிய நகரமான ஹவுஸ்டனில் பெய்த கன மழையால் அங்கு வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் 200 இந்திய மாணவர்கள் கழுத்தளவு வெள்ள நீரில் சிக்கியுள்ளனர்.

மேலும், இரு இந்திய மணவர்கள் மருத்துவமனை ஐசியு.வில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுஸ்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ 200 மாணவர்கள் கழுத்தளவு வெள்ள நீரில் சிக்கி தவித்து வருவதாக அங்குள்ள இந்திய தூதர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் கடற்படையினர் படகுகள் மீட்டு பணி க்கு தேவைப்படுவதால் அனுமதிக்கவில்லை’’ என தெரிவித்துள்ளார்.

‘‘இந்திய தூதர் அனுபம்ராய் மீட்டு பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். இந்திய மாணவர்கள் ஷாலினி, நிகில் பாத்தியா ஆகியோர் ஐசியு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உறவினர்கள் அங்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று மற்றொரு டுவிட்டில் சுஸ்மா தெரிவித்துள்ளார்.

‘‘ஹவுஸ்டன் வெள்ளத்தில் சிக்கி இருவர் இறந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப் பெருக்கும் அதிகரித்துள்ளது. ஆயிரணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் மரணத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். மீட்பு பணியாளர்களும் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உள்ளது’’ என்று அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.