டில்லி,

னைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.200 நோட்டு வைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த  பண மதிப்பிழப்புக்கு பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டு, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து புதிய 200 ரூபாய், 50 ரூபாய் நோட்டுக்களையும் கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு மற்றும் ரூ.500 நோட்டை ஏடிஎம் இயந்திரத்தில் வைப்பதற்கு தகுந்த மாதிரி இயந்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டது.

ஆனால், ஓராண்டு கடந்தும்  இந்த புதிய 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்கள் இன்னும் ஏடிஎம் இயந்திரங்களில் வைக்கப்படவில்லை. வங்கிகளில் மட்டுமே கிடைக்கிறது. இதன் காரணாமக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்காத நிலையே நீடித்து வருகிறது.

இதுகுறித்து  மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் புகார்கள் குவிந்தன.

இதையடுத்து, அனைத்து வங்கிகளும் ஏ.டி.எம்.களில் கண்டிப்பாக ரூ.200 பணத்தை வைக்க வேண்டும். அதற்கு தகுந்த மாதிரி எந்திரங்களில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதுகறித்து, ஏ.டி.எம். இயந்திரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நமது நாடு முழுவதும் 2 லட்சத்து 20 ஆயிரம் ஏ.டி.எம்.கள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.  இவை அனைத்திலும் மாற்றம் செய்ய குறைந்தபட்சம் 6 மாதம் வரை ஆகும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.