சென்னை விமானநிலையத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் 3 கட்டு சிக்கியது

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த மாணிக்கராஜ் (39) என்பவரின் பெட்டியை சோதனை செய்தனர். அதில் புதிய ரூ. 2000 நோட்டுகள் 3 கட்டு இருந்தது.

இதனால் மாணிக்கராஜின் பயணத்தை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர். அவரிடம் இருந்து ரூ .6 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுபற்றி சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். வருமான வரித்துறை விரைந்து பணத்தை கைப்பற்றி மாணிக்கராஜிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.