சென்னையில் 2000 தனியார் பேருந்துகள்! அமைச்சர் அறிவிப்பு!

சென்னை,

ரசு போக்குவரத்து ஊழியர்களின்  பஸ் ஸ்டிரைக் எதிரொலியாக சென்னையில் 2000 தனியார் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 90 சதவிகித அரசு பேருந்துகள் இயக்கம் முடங்கி உள்ளது.

இதன் காரணமாக தனியார் பேருந்துகளை அதிக அளவில் இயக்க அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று கொலை சென்னையில் உள்ள போக்குவரத்துதுறை தலைமை அலுவலக மான சென்னை பல்லவன் இல்லத்தில் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் வழக்கம் போல் அரசு பேருந்துகள் பெருமளவில் இயக்கப்படுவதாகவும், சென்னை நகரில் மக்களின் அவதியை குறைக்க 2,000 தனியார் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார் என்றும் கூறினார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அரசு அதற்கு தயாராக உள்ளது.

தமிழகத்தில் சிறப்பு புறநகர் ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.