வந்துவிட்டது ‘2000 ரூபாய் நோட்டு’ சேலை !

சூரத்,

பெண்களின் விருப்பமான சேலைகளில், தற்போதைய டிரெண்டாக வந்துள்ளது 2000 ரூபாய் நோட்டு படங்கள் அச்சிடப்பட் சேலை.

இந்த சேலை பெண்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த பிறகு, புதிய 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தி புழக்கத்தில் விட்டார்.

இந்த நோட்டு பார்ப்பதற்கு லாட்டரி டிக்கெட் போல காணப்பட்டாலும், மிகவும் எடை குறைவாக, சிறிய வடிவில் உருவாக்கப்பட்டு அந்த நோட்டின்  நிறம் பெண்களை கவரும் வகையில் ‘பிங்க்’ கலரில் இருந்தது.

பொதுவாகவே பெண்களுக்கு பிடித்தமான கலரில் ‘பிங்க்’ கலருக்கே அதிக முக்கியத்துவம் உண்டு.

அதன் காரணமாகவே, சேலை தயாரிப்புக்கு புகழ்பெற்ற இடமான குஜராத் மாநிலத்திலுள்ள சூரத்-ல் உள்ள சேலை தயாரிப்பு நிறுவனம் ஒன்று,  புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் மாதிரி அச்சிடப்பட்ட சேலைகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி உள்ளது.

 

இந்த சேலை தற்போது  இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சேலையை காணும் பெண்கள் ஆர்வத்துடன் சேலையை வாங்கிச் செல்வதாக விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.